நீற் என் அருகில் இருக்கும் வரை...பாகுபலி டயலாக் பேசி புகழ் பதிவிட்ட புகைப்படம்!

Webdunia
புதன், 5 மே 2021 (15:15 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருந்த புகழ் காமெடியை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது என்றே சொல்லலாம்.
 
அந்நிகழ்ச்சிக்கு பிறகு புகழ் சொந்தமாக சொகுசு கார் வாங்கினார், படவாய்ப்புகளும் குவியத்துவங்கியுள்ளது. தற்போது அஜித் நடித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் டிவியின் பிரபல புரோகிராமிங் ஹெட் பிரதீப் மில்ராய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு " நீற் என் அருகில் இருக்கும் வரை என்னை கொள்ளும் ஆண் மகன் இன்னும் பிறக்கவில்லை தலைவா" என அவரது உறவின் ஆழத்தை பாகுபலி ஸ்டைலில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்