அமீர்கான் படத்தில் நடிக்க இருந்த டேனியல் கிரேக்… ஜேம்ஸ்பாண்ட் ஆனதால் நடக்காத சோகம்!

புதன், 28 ஜூலை 2021 (11:20 IST)
ஜேம்ஸ் பாண்ட் நடிகரான டேனியல் கிரேக் அமீர்கானின் ரங்தே பசந்தி படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க இருந்தாராம்.

2006ஆம் ஆண்டு, ஆமிர் கான், சித்தார்த், மாதவன் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'ரங் தே பஸந்தி'. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க இயக்குனர் டானியல் கிரேக்கை தேர்வு செய்து அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினாராம்.

அப்போது கிரேக் இயக்குனரிடம் சில மாதங்கள் காத்திருக்க சொல்லி தான் ஜேம்ஸ் பாண்ட் வேடத்துக்கு தேர்வு செய்யப்படலாம் என்றும் அப்படி தேர்வாகவில்லை என்றால் தான் நடிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் ஜேம்ஸ்பாண்டாக தேர்வு செய்யப்பட்டதால் அவரால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்