கார் விபத்து… நடிகர் அடித்து துன்புறுத்தியதாக போலிஸ் புகார்!

புதன், 20 ஜனவரி 2021 (10:43 IST)
நடிகர் மற்றும் இயக்குனர் மகேஷ் மஞ்சரேக்கரின் காரின் மீது மோதியதால் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கைலாஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

பாலிவுட்டில் இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்படுபவர் மகேஷ் மஞ்சரேக்கர் . இவர் தமிழில் ஆரம்பம் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இவரின் புனே – சோலாப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது கைலாஷ் சத்புதே என்பவரின் கார் இவர் கார் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மகேஷ் கைலாஷை அடித்து அசிங்கப்படுத்தியதாக கைலாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்