இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் நல்ல படங்கள் வருகின்றன. தமிழில்தான் நல்ல படங்கள் மிகக்குறைவு.
தமிழைவிட பல மடங்கு சின்ன கன்னட திரையுலகில் வரிசையாக நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
2014 கன்னடத்தில் வெளியான உலிதவரு கண்டந்தெ படத்தை தமிழில் நிவின் பாலி நடிப்பில் ரீமேக் செய்து வருகின்றனர். அதேபோல் கன்னடத்தில் வெற்றி பெற்ற கோதி பன்ன சாதாரண மைக்கட்டு என்ற படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கை பிரகாஷ்ராஜ் வாங்கியுள்ளார்.
கன்னடத்தில் ஹேம்நாத் இயக்கிய இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் பிரகாஷ்ராஜ் தயாரித்து நடிக்க உள்ளார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்