தமிழுக்கு வரும் ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோயின்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (14:50 IST)
‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தில் நடித்த ஷாலினி பாண்டே, தமிழில் ஹீரோயினாக நடிக்கிறார்.

 
 
நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘100% லவ்’. இந்தப் படத்தை, தமிழில் ரீமேக் செய்வதாக அறிவித்தனர். புதியவரான சந்திரமெளலி இயக்கும் இந்தப் படத்தில், ஜி.வி.பிரகாஷ் ஹீரோ. ஹீரோயினாக, லாவண்யா திரிபாதி  கமிட்டானார்.
 
ஆனால், திடீரென படத்தில் இருந்து லாவண்யா விலகிக் கொள்ள, வேறு ஒரு ஹீரோயினைத் தேடிவந்தனர். சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் நாயகி ஷாலினி பாண்டே தற்போது இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்