இவ்ளோவ் சிம்பிளா திருமணம் பண்ணிட்டாரே காமெடி நடிகர் சதீஷ்?

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (18:27 IST)
பிரபல காமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம் செய்திருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.


 
நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் என்னது சதீஷுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
சதீஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்ட இயக்குனர் முத்தையா அவருக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 
 
இதையறிந்த பலர், சதீஷ் ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாக அறிந்து பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள். மேலும் வாழ்த்துக்களும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட சீன் என்று நடிகர் சதீஷ் கூறியிருக்கிறார்.
 
முன்னதாக, பைரவா படத்தில் நடிக்கும் போது கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ததாக புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்