’தளபதி 65’ பட்டியலில் திடீரென இணைந்த இளம் இயக்குனர்

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (22:19 IST)
தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 65வது திரைப்படமான ’தளபதி 65’ படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ’தளபதி 65’ படத்தை அருண் காமராஜா, மோகன்ராஜா, அட்லி, வெற்றிமாறன், பாண்டியராஜ், பேரரசு, மகிழ்திருமேனி உள்பட பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபடுகிறது
 
இந்த இயக்குனர்களிடம் ஏற்கனவே ஒன்லைன் கதை கேட்டுள்ள விஜய், நாளை மறுநாள் முதல் முழு கதையையும் கேட்க உள்ளாராம். அதன் பிறகுதான் அவர் ’தளபதி 65’ படத்தின் இயக்குனர் யார் என்பதை விஜய் முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்தப் பட்டியலில் திடீரென ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் என்பவரும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. பிரதீப் கூறிய ஒன்லைன் கதை விஜய்க்கு ரொம்பவே பிடித்து விட்டதாகவும் அந்த கதையை விரிவாக எழுதிக் கொண்டு வரும்படி அவரிடம் விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
எனவே இப்போதைய நிலையில் பிரதீப் மற்றும் அட்லீ தான் ’தளபதி 65’ படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்