கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த கோப்ரா படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நடைபெற்றது.
இந்நிலையில் இப்போது ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. விரைவில் தயாரிப்பு தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இப்படி ஒரு காரணம் சொல்லப்பட்டாலும், வேறொரு காரணமும் ரிலீஸ் தள்ளிப் போவதற்குப் பின்னணியில் சொல்லப்படுகிறது. படத்தின் ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்கப்படவில்லையாம். படத்தின் பட்ஜெட் எகிறியதால் தயாரிப்பாளர் சொல்லும் விலைக்கு ஒடிடி நிறுவனங்கள் வாங்க முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. இதுவும் ரிலீஸ் தள்ளிப்போவதற்கான காரணம் என சொல்லப்படுகிறது.