“இது ரெண்டு மணிநேர விளம்பரங்க….”….’தி லெஜண்ட்’ பார்த்து நொந்து போய் வெளியேறும் ரசிகர்கள்

வியாழன், 28 ஜூலை 2022 (11:07 IST)
லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படம் இன்று பலத்த விளம்பரங்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார்.. தமிழ் உட்பட 5 இந்திய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இன்று வெளியாகியுள்ளது ‘தி லெஜண்ட்’ திரைப்படம்.

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்காக பல கோடி ரூபாயை விளம்பரத்துக்காக படக்குழு செலவிட்டது. தமிழ்நாட்டில் படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்துள்ளார்.

படத்துக்காக முன்னணி நடிகர்களின் படங்கள் போல அதிகாலை சிறப்புக்காட்சி எல்லாம் திரையிடப்பட்டது. இந்நிலையில் காலையில் முதல் ஷோ பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் பலரும் படத்தை கழுவி ஊத்த தொடங்கியுள்ளனர். 2 மணிநேரம் விளம்பரப் படம் போல இருப்பதாகவும், படத்தில் ரசித்துப் பார்ப்பதற்கு ஒரு விஷயம் கூட இல்லை என்றும் புலம்பி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்