இன்னமும் முடியாத கோப்ரா கிராபிக்ஸ் பணிகள்… கடைசியா ஒரு தேதிய சொன்ன இயக்குனர்!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:05 IST)
கோப்ரா படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த நாளில் ரிலீஸாகாது என தற்போதைய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த  ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நடைபெற்றது.

இந்நிலையில் இப்போது ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த விருமன் திரைப்படம் தற்போது ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் தற்போது வரை கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரிடம் ஆகஸ்ட் இறுதிக்குள் படத்தின் பணிகளை முடித்துத் தருவதாகவும், அதன் பிறகு ரிலீஸ் தேதியை திட்டமிட்டுக் கொள்ளலாம் எனவும் உறுதி அளித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்