விக்ரம்-அஜய்ஞானமுத்து படத்தின் டைட்டில் குறித்த தகவல்!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (06:54 IST)
சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தை முடித்துவிட்டு விக்ரம், விரைவில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்லவுள்ளதால் விகர்ம் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘கோப்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே இந்த படத்திற்கு ‘அமீர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த டைட்டில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வரும் ஜனவரி 1ஆம் தேதி  இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவிருப்பதாகவும், அப்போதுதான் இந்த படத்தின் டைட்டில் ‘அமீர்’ அல்லது ‘கோப்ரா’ என்பது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வரும் ’விக்ரம் 58’ படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் இயக்குனரின் முந்தைய படங்களான டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்கள் போலவே த்ரில், சஸ்பென்ஸ் நிறைந்த படம் என்பது குறிப்ப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்