சினிமா உலகில் மனிதநேயத்துக்கு நீங்கள் தான் குரு… இயக்குனர் சிம்புதேவன் நெகிழ்ச்சி!

வியாழன், 28 டிசம்பர் 2023 (10:58 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். இதையடுத்து அவ்வப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்தமாதங்களில் அவர் உடல்நிலை மேலும் குன்றியது.

இதையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு சக திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் சிம்புதேவன் விஜயகாந்த் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கலில் “சினிமாவில் பல துறைகளிலும்.. யாருக்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் குருவாக இருக்கலாம். ஆனால் ‘மனிதநேயத்தில்’ எல்லோருக்கும் குருவாக இருந்தது நீங்கள் தான்!” என பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்