அதில் “அன்பிற்கினிய நண்பர் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைக் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளர். அவருடனான நட்பு எந்தக் காலத்திலும் எத்தகைய அரசியல் சுழலிலும் மாறவே இல்லை. கேப்டன் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்தின் மறைவு தமிழகத்துக்கும் திரையுலகிற்கும் பெரிய இழப்பாகும்.