இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய 'திருமணம்' திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே பத்திரிகையாளர்கள் காட்சியின் முடிவில் இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது. படம் வெளியான பின்னரும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் கிடைத்தது
ஆனால் '90ml' படத்திற்கு கிடைத்த தியேட்டர்களில் பாதிகூட இந்த படத்திற்கு கிடைக்கவில்லை என்றும், திரையிடப்பட்டிருக்கும் தியேட்டர்களிலும் திருப்தியான வசூல் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 'திருமணம்' படம் குறித்து இயக்குனர் சேரன் தனது டுவிட்டரில், \விமர்சனங்கள் எல்லாம் நல்லா வருது.. கூட்டம்தான் தியேட்டருக்கு வரணும்... இல்லையெனில் என் வாழ்க்கை திருத்தி எழுதப்படும்....என்னை நம்பி பணம் முதலீடு செய்தவருக்கு அது திரும்ப கிடைத்தால் போதும்... இதைப்பார்க்க மக்கள் வரவில்லை என்றால் இனி சேரன் இல்லை' என்று பதிவு செய்துள்ளார்.
என்னதான் நல்ல கருத்தை படத்தில் கூறியிருந்தாலும் அதை சொல்லும் விதம் சுவாரஸ்யமாக இல்லாவிட்டால் படம் பார்க்க தியேட்டருக்கு மக்கள் வருவது கடினம் என்பதே சினிமா ரசிகர்களின் கருத்தாக உள்ளது