சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்தி வைப்பு!!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2016 (16:03 IST)
சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இந்த வருடமும் டிசம்பர் 15-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 14-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

 















இந்த சர்வதேச திரைப்பட விழாவில் உலகின் பல மொழிகளை சேர்ந்த ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி, சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் தேதியை ஒத்தி வைத்துள்ளனர். அதன்படி, ஜனவரி 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை இந்த விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் நடைப்பெறவுள்ள இந்த திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படங்களான 24, அம்மா கணக்கு, தேவி, தர்மதுரை, இறைவி, ஜோக்கர், கர்மா, நானும் ரௌடிதான், பசங்க 2, ரூபாய், சில சமயங்களில், உறியடி ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்