அம்மா தயாரிப்பில் மேகா ஆகாஷ் நடிக்கும் படம்: வைரல் போஸ்டர்!

புதன், 16 பிப்ரவரி 2022 (15:32 IST)
அம்மா தயாரிப்பில் மேகா ஆகாஷ் நடிக்கும் படம்: வைரல் போஸ்டர்!
பிரபல நடிகை மேகா ஆகாஷ் தனது அம்மா தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சிம்புவின் ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற திரைப்படத்திலும் தனுஷின் ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகை மேகா ஆகாஷ்.
 
இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் தனது அம்மாவின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தெலுங்கில் உருவாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுஷாந்த் ரெட்டியின் உதவியாளர் அபிமன்யு ரெட்டி என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில்ஸ்டைலாக சிகரெட் பிடித்தபடி மேகா ஆகாஷ் இருக்கும் காட்சி உள்ளது. இதற்கு ரசிகர்களிடமிருந்து கண்டனங்களும் வரவேற்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்