’இந்தியன் 2’ விவகாரம்: லைகா தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (12:03 IST)
’இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டில் லைகா தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆனதால் ராம்சரண் தேஜா நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க சென்றுவிட்டார். இதனை அடுத்து ’இந்தியன் 2’படத்தை இயக்கி முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்றும் அவர் 150 கோடிக்கு இந்த படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருந்தார் என்றும் ஆனால் 250 கோடிக்கு மேல் தற்போது செலவாகி விட்டதாகவும் ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளமான 40 கோடியில் 14 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாகவும் எனவே எங்கள் படத்தை இயக்கி முடித்த பின்னர்தான் அவர் வேறு படத்தை இயக்க வேண்டும் என்றும் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளது 
 
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட் வேறு படங்களை ஷங்கர் இயக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மறுத்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்