சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் 24

Webdunia
செவ்வாய், 10 மே 2016 (12:49 IST)
5. த ஜங்கிள் புக் (ஆங்கிலம்)
த ஜங்கிள் புக் கடந்தவார இறுதியில் 9.9 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 2.96 கோடிகள்.
 
4. தெறி
கடந்த வார இறுதியில் தெறி சென்னையில் 21.62 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை தெறியின் சென்னை வசூல், 9.7 கோடிகள்.


 

 
3. மனிதன்
உதயநிதி நடித்துள்ள மனிதன் 3 -வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் சென்னை வசூல் 36.50 லட்சங்கள். இதுவரை சென்னையில் 1.96 கோடியை வசூலித்துள்ளது.
 
2. கேப்டன் அமெரிக்கா - சிவில் வார் (ஆங்கிலம்)
சென்ற வாரம் வெளியான இந்த ஆங்கிலப்படம் முதல் மூன்று தினங்களில் 49.52 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.


 
 
1. 24
முதலிடத்தில் விக்ரம் குமார் இயக்கிய 24. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 1.53 கோடியை வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்