தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சேரன் மாயக்கண்ணாடி படத்தின் தோல்விக்குப் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இன்றி உள்ளார். இதையடுத்து அவர் நடிப்பில் கவனம் செலுத்தவே சில படங்களில் நடித்து வந்தார். அதிலும் இப்போது ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டுள்ளது. அதைப் போக்கும் விதமாக ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார்.