படப்பிடிப்பை முடித்த சந்திரமுகி 2 படக்குழு.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

புதன், 21 ஜூன் 2023 (16:12 IST)
2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மைசூர் உள்ளிட்ட பல இடங்களில் பல கட்டங்களாக நடந்து வந்தது. படத்தில் சந்திரமுகியாக யார் நடிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அந்த கதாபாத்திரத்துக்கு  பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தைப் படக்குழு ஒப்பந்தம் செய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இதையடுத்து படத்தின் ரிலீஸுக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்