ஜெயிலர் படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடக்கம்… பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்!

திங்கள், 19 ஜூன் 2023 (09:01 IST)
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகும், நெல்சன் பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகும் இணைந்துள்ள திரைப்படம் ஜெயிலர். இதனால் வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இல்லை. ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியோடு மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பலமொழி கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் சுதந்திர தின விடுமுறையை ஒட்டி ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

ஏற்கனவே ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் விநாயகன் தன்னுடையக் காட்சிகளுக்கான டப்பிங்கை இப்போது பேசி முடித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் பகிர, அது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்