சந்தானத்தின் ''பாரிஸ் ஜெயராஜ்'' படத்திற்கு சென்சார் சான்றிதழ்....படக்குழுவினர் மகிழ்ச்சி...

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:22 IST)
நடிகர் சந்தானத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள’’ பாரிஸ் ஜெயராஜ் ’’படத்தின்  படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ்  கிடைத்துள்ளது.
.
காமெடி நடிகரான சந்தானம் முன்னணி நடிகர்களுக்கு இணையான காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆகி தொடர்ச்சியாக ஹீரோ வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன.

#ParrisJeyaraj
இந்நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குநர் ஜான்சன். கே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாரிஸ் ஜெயராஜ். இப்படத்தை கே.குமார் என்பவர் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கனவே சிங்கில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. கானா பாடலான இது வைரலானது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹீரோக்கள் எல்லோரும் வரிசையாக தியேட்டர்களில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்யத்திட்டமிட்டுள்ள நிலையில் சந்தானத்தில் பாரிஸ் ஜெயராஜ் படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்