ஏர்போர்டில் ரசிகருடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகை !

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (19:36 IST)
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நேற்று தனது 34 வது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிக்கையாளர்கள், அவரது பிறந்தநாளை ஏர்போர்ட்டில் கொண்டாடியது போன்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஓம் சாந்தி ஓம், பத்மாவத், சென்னை எக்ஸ்பிரஸ், போன்ற படங்களில் நடித்துள்ளர் தீபிகா படுகோனே. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய சபாக் என்ற படத்தில்  தீபிகா படுகோனே நடித்துள்ளார். 
 
இப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தனது கணவர் ரன்வீர் சிங்குடன் அவர் நேற்று மாலை மும்பை விமான நிலையம் வந்திறங்கினார்.

அப்போது, அங்கு குழுமியிருந்த பத்திரிக்கையாளர்கள் புகைப்படக்காரர்கள் மத்தியில் ஒரு புகைப்படக்காரர் சர்ப்ரைசாக ஒரு கேக்கை தீபிகாவிடம் நீட்டினார்.  
 
அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த தீபிகா படுகோனே அங்கு தனது பிறந்த நாளைக் கேக் வெட்டிக் கொண்டாடினார்.தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்