பிரபல நடிகர் சஞ்சத் சத்திற்கு புற்றுநோய் உறுதி.... அவரது மனைவி உருக்கமாக பதிவு !

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (16:35 IST)
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இப்போது அவர் நான்காம் கட்ட புற்றுநோய் என தகவல் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகர் சஞ்சய் தத் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் வரிசையாக படங்களை நடித்து வந்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் கே ஜி எப் படத்தில் வில்லனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரது போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோன ரேபிட் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் ஒருநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மீண்டும் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் அவருக்கு மேற்கொண்ட சோதனையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக சொல்லப்பட்டது. இதற்காக அவர் மும்மையில் உள்ள தனது வீட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து சஞ்சய் தத்தின் மனைவி மாயா தத்   தனது இன்ஸ்டாகிராம் பகக்த்தில் பதிவிட்டுள்ளதாவது : வாழ்க்கையில் மோசமான நாட்களே எனக்கு மிக்ச சிறந்த நாட்களாக உள்ளது அதனால் முயற்சியை எப்போதும் நிறுத்தாதீர் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்