தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்த் தேர்தல் வாக்குப்பதிவின் எண்ணிக்கை இன்று இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இன்று ஞாயிறு ஊரடங்கும் உள்ளதாலும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் அதைக் கண்காணிக்க ஒரு லட்சம் போலிஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, உள்ளூர் போலீசார் ஆகியோரும் அடக்கம். வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே கட்சித் தொண்டர்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கட்டுப்பாடுகளையும் மீறி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.