மாமன்னன் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்… உதயநிதி நடித்த ஏஞ்சல் பட தயாரிப்பாளர் வழக்கு!

செவ்வாய், 20 ஜூன் 2023 (07:20 IST)
அமைச்சர் ஆகிவிட்ட உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது.

சமீபத்தில் வெளியான டிரைலர் சமூகவலைதளங்களில் 10 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ளது. ஜூன் 29 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் ராம சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ராமசரவணன் தயாரிக்கும் ஏஞ்சல் என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டது. சில நாட்கள் ஷூட்டிங் முடிந்ததும் படம் கிடப்பில் போடப்பட்டது. படத்துக்கு உதயநிதி 8 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் முடித்துவிடுவோம் என முன்பே ராம சரவணன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது மாமன்னன் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ”ஏஞ்சல் படத்தை முடிக்க 25 நாட்கள் கால்ஷீட் தந்துவிட்டு மாமன்னன் திரைப்படத்தை ரிலீஸ் செய்யலாம். அல்லது எனக்கு 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இல்லைஎய்ன்றால் மாமன்னன் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும்” எனக் கூறி அவரது மனுவை தாக்கல் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்