''மாமன்னன்'' பட டிரைலர் 10 மில்லியன் வியூஸ்...டிரெண்டிங்கில் நம்பர் 1 - உதயநிதி டுவீட்

திங்கள், 19 ஜூன் 2023 (13:26 IST)
உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' திரைப்படத்தின் டிரைலர் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின்,  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மாமன்னன். 

இப்படத்திற்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் கடந்த 16 ஆம் தேதி  மாலை  படக்குழு வெளியிட்டது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் பெரும்  வரவேற்பை பெற்று, இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.

இதை   நடிகர் உதயநிதி தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு போஸ்டர் வெளியிட்டு  '' ஆதரவுக்கு நன்றி ''என்று தெரிவித்துள்ளார். 

 
 

10 M views on the #MAAMANNAN trailer. Thanks for the support. Trending #1.https://t.co/EFFTuTzKLU@mari_selvaraj @RedGiantMovies_ @KeerthyOfficial #Vadivelu @arrahman #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3pic.twitter.com/c4r3goMEg0

— Udhay (@Udhaystalin) June 19, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்