பேட்ட பட விவகாரம்… தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி மீது வழக்கு!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (15:56 IST)
பேட்ட படத்தின் வெளிநாட்டு உரிமை தன்னிடம் இருப்பதாகக் கூறி மலேசிய நிறுவனம் ஒன்றிடம் 30 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை தன்னிடம் இருப்பதாகக் கூறி தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி மலேசியாவைச் சேர்ந்த மாலிக் என்ற நிறுவனத்திடம் 30 கோடி ரூபாயைப் பெற்றுள்ளார். ஆனால் பேட்ட படத்தின் உரிமை அவரிடம் இல்லை என்று தெரிந்ததும் அந்த நிறுவனம் நெருக்கடி கொடுக்க, 15 கோடியை திரும்ப கொடுத்துள்ளார்.

மீதி பணத்துக்கு காஞ்சனா 3, நான் ருத்ரன் ஆகிய படங்களின் உரிமையை தருவதாக சொல்லியுள்ளார். ஆனால் அவர் சொன்னதை நிறைவேற்றவில்லை. இதையடுத்து சம்மந்தப்பட்ட நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்