விஜய்யின் ''இலவச பாடசாலை திட்டம்'' பற்றி புஸ்ஸி ஆனந்த் தகவல்

புதன், 12 ஜூலை 2023 (21:55 IST)
விஜய்யின் இலவச பாடசாலை திட்டம் பற்றி புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, பனையூரில் இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் 2 வது  நாளாக சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, ‘’வரும் ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளில் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்கவுள்ளதாகவும்,  ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம், விழியகம், குருதியகம், விருந்தகம் ஆகிய மக்கள் இயக்க நற்பணிகளைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில், இரவு நேர பாட சாலையை தொடங்க விஜய் முடிவெடுத்துள்ளதாக’’ தகவல் வெளியானது.

இந்தக் கூட்டம் நிறைவடைந்த பின்னர்,  இன்று நடைபெற்ற மக்கள் இயக்க  நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இரவு நேர பா சாலை பற்றி  விஜய் முடிவு செய்துள்ளதாக வெளியாகும் தகவல் பற்றி  விஜய் ‘’மக்கள் இயக்கத்தின்  செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம்   செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர், ‘’தளபதியின் அனுமதி பெற்று இது அறிவிக்கப்படும்.  மக்கள் இயக்கம் ஏற்கனவே  நடத்திக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் இது ஏற்கனவே தளபதி மக்கள் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது.

அவருடைய அனுமதி மற்றும் ஆலோசனை பெற்று பத்திரிக்கை செய்தியாக உங்களுக்கு அளிப்போம் ‘’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்