ப்ரூஸ் லீ நினைவு தினம்....இணையதளத்தில் ட்ரெண்டிங்

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (16:50 IST)
கடந்த 1940 ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தவர் ப்ரூஸ் லீ ஆவார். இவரது இயற்பெயர் லீ ஜூன் ஃபேன் புரூஸ் ஆகும்.  இவர் அமெரிக்கத்  திரைப்பட நடிகராகவும்,  தற்காப்புக் கலைஞராகவும், தற்காப்புக் கலைஞர் பயிற்றுநராகவும், மெய்யிலாளராகவும்  அறியப்படுகிறார்.

இவர் கடந்த 1971 ஆம் ஆண்டு லோ வீ இயக்கத்தில் த பிக்பாஸ் படத்தில் அறிமுகமானார். இவரது நடிப்பில் ராபர்ட் கிளவுட் இயக்கிய வே ஆப் த டிராகன் படம் இவரை புகழின் உச்சியில் கொண்டு சேர்த்தது.

அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன் கையில் காசியின்றி இருந்த ப்ரூஸில்  1000 டாலர்கள் சம்பாதிப்பதாக உறுதி எடுத்ததன்படியே ஹாலிவுட் உலகின் நுழைத்து சினிமாவில் சாதித்துக் காட்டினார். புகவ் வெளிச்சத்தில் இருக்கும்போது, ஹாங்காங்கில் உள்ள கெளலீன் டாங்கில் தனது 32 வது வயதில் உயிரிழந்தார்.

இன்று இவரது நினைவுநாளை முன்னிட்டு ரசிகர்கள் இணையதளத்தில் அவரது படங்கள், செய்திகலை டிரெண்டிங் செய்து வருகின்றனர். #BruceLeeMemorial Day

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்