கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமீர்கான் “இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது” என்று கூறியதை அடுத்து அவர் தேசபக்தி அற்றவர் எனக் கூறி “தற்போது லால்சிங் சத்தா படத்தைப் புறக்கணிப்போம்” என சிலர் ஹேஷ்டேக் உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். படம் அடைந்த படுதோல்விக்கு இந்த ஹேஷ்டேக்குகளும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
இதைப்பற்றி நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் பேசினார். அவர் கூறியதாவது, பாய்காட் ட்ரண்ட்டால் அமீர்கான் மட்டும் பாதிக்கப்படவில்லை. அந்த படத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றியுள்ளார்கள். அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும். அவர்களின் வேலை மற்றும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படலாம். பாய்காட் ஏன் எதற்கு என்று தெரியவில்லை. தவறான புரிதலால் நடக்கிறது எனக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து #BoycottLigermove, #BoycottVijayDevarakonda போன்ற ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.