இப்படத்தை அடுத்து, டியர் காம்ரேட் படத்திலும் விஜய்தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். அப்போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியது. ஆனால், இருவரும் அதை மறுத்தனர்.
இந்த நிலையில், கரண் ஜோகரின் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் விஜய்தேவரகொண்டாவும், நடிகை அனன்யா பாண்டே இருவரும் கலந்துகொண்டனர். அப்போது, விஜய் தேவரகொண்டாவைப் பற்றிய கேள்விக்குப் பதில் கூறும்போது, அவருக்கும் ராஷ்மிகாவுக்கும் காதல் இருப்பதுபோன்று கூறினார்.