விஜய்தேவரகொண்டாவின் ‘லைகர்’ சென்சார், ரன்னிங் டைம் தகவல்கள்!

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (21:03 IST)
விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ளது
 
 தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
 
‘லைகர்’  என்ற படத்திற்கு ‘யூஏ’ சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் அதாவது 140 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
விஜய்தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யாகிருஷ்ணன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பூரி ஜெகன்நாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்