இந்திப் படங்களில் நடிப்பதற்காக தமிழ், தெலுங்குப் படங்களை ஒரேயடியாக நிராகரித்தவர் இலியானா. ஆனால், இந்தியில் எப்போதாவதுதான் படம் கிடைக்கிறது. அந்த அனுபவப் பாடத்தை சமீபத்தில் இலியானா பகிர்ந்து கொண்டார்.
பாலிவுட்டில் நடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டால் அது நம்மை உயர்த்தும். இல்லையென்றால் பாலிவுட் மொத்தமாக நம்மை சினிமாவை விட்டே துரத்தி விடும். நான் படவாய்ப்பு இல்லை என்றாலும் போய் வாய்ப்புக்காக கெஞ்ச மாட்டேன். கையேந்தி நிற்க மாட்டேன் என்றார்.
வாய்ப்பு கிடைக்கலைன்னாலும் வீம்பை விடமாட்டேன் என்கிறார்.