கவினுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை… இயக்குனர் இளன் கொடுத்த அப்டேட்!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (14:12 IST)
ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படமான பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் ஸ்டார் என்ற படம் அறிவிக்கப்பட்டு அதன் சில போஸ்டர்களும் வெளியாகின. ஆனால் இந்த படம் சிலபல காரணங்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை.

இந்நிலையில் இப்போது கைவிடப்பட்ட ஸ்டார் படத்தை டாடா புகழ் கவின் நடிப்பில் மீண்டும் தொடங்குகிறாராம் இளன். இந்த படத்தை நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாலிவுட் நடிகை முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக படத்தின் இயக்குனர் இளன் அறிவித்துள்ளார். மற்றொரு நாயகியாக தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் நடிக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்