கருப்பு நிறத்தழகி நயன்தாராவின் ஜிந்தாகோ வீடியோ.... ஐரா அப்பேட்

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (14:00 IST)
கருப்பு பேரழகியாக நயன்தாரா நடித்துள்ள ஐரா படத்தின்  ஜிந்தாகோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.


 
லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் ஐரா.
 
இந்த படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். கே. எஸ் சுந்தமூர்த்தி இசையமைத்துள்ளார். 
 
இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் மேகதூதம் என்ற பாடல் பிப்ரவரி 5ம் தேதி வெளியிட்டனர். இரண்டாவது பாடல் காரிகா சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்போது மீதமுள்ள ஒரு ஒரு பாடலான ஜிந்தகோ  இன்று வெளியாக உள்ளது.  


 
மாரச் 28ம் தேதி ஐரா படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்