விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் பிந்து மாதவி: ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

வியாழன், 17 செப்டம்பர் 2020 (08:30 IST)
விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்த க/பெ ரணசிங்கம் மற்றும் மாமனிதன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் விஜய்சேதுபதி தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ’யாருக்கும் அஞ்சேல்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். விஜய் சேதுபதி நடித்த ’புரியாத புதிர்’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’இஸ்பேட்ராஜாவும் இதயராணியும்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயகொடி இந்தப் படத்தை இயக்கி வருகிறார் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. த்ரில் மற்றும் கிரைம் சப்ஜெக்ட் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிந்து மாதவி நடித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த கதையில் அவர் ஆக்சன் ஹீரோயினியாக நடிக்கிறார் என்பதும் அவருக்கு ஸ்டண்ட் காட்சிகளும் இந்த படத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Happy to Present the 1st Look & Movie of my Dear Most director @jeranjit ‘s next #YaarukkumAnjael

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்