"விஜய் செய்த காரியத்தால் பதறிய அட்லீ" பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை பாருங்கள்!

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (18:49 IST)
நடிகர் விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர்  நடிக்கும் இப்படத்தில் பிரபல வில்லன் நடிகராக இருந்து பிறகு காமெடி ட்ராக்கிற்கு சென்ற ஆனந்த்ராஜும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
இதற்கிடையில் சமீபத்தில் பேட்டியளித்த ஆனந்த்ராஜ் பேசும்போது, ஜாக்பாட் படத்தின் ஆடியோ லான்ச் அன்று நான் பிகில் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தேன். அதில் பங்கேற்க முடியாததை நடிகர் விஜய்யிடம் சொன்னபோது அவர் உடனே அதை அட்லீயிடம் கூற பின்னர் என்னை புறப்பட்டு செல்லும் படி கூறினார். 
 
ஆனால் என்னால் சரியான நேரத்திற்கு செல்லமுடியவில்லை. பின்னர் மறுநாள் விஜய் என்னை அழைத்து சார், ஆடியோ லான்ச் சிறப்பாக முடிந்ததா என விசாரித்தார். அதற்கு நான், ஆமாம் சார் ஆனால் நேரத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை என்று கூற உடனே விஜய் அட்லீயை திரும்பி பார்த்தார். அதற்கு அட்லீ ஒரு நிமிடம் பதறிப்போய் சார், நான் தான் அவரை உடனே அனுப்பி வைத்தேனே என்று கூறினார் என ஆனந்த்ராஜ் சிரித்துக்கொண்டே தெரிவித்தார். 


 
இன்று திரைக்கு வந்துள்ள ஜாக்பாட் படத்தில் ஆனந்தராஜின் நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்