இந்த நிலையில், இப்படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் எனவும், இப்படத்தின் பெயர் அதிகாரி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
அ ந்நியன்,இந்தியன் போன்ற படங்களைப் போன்று இப்படமும் ஒரு சமூக கருத்துள்ள படமாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. இப்படத்தை ஜீ நிறுவனம் சுமார் ரூ.300 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாகவும், இப்படத்தின் தியேட்டரிக்கல் ரைட்ஸ் அதிக விலைக்கு போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.