பிக்பாஸ் சீசன் 7: இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் இவர்தானா?

வெள்ளி, 27 அக்டோபர் 2023 (17:51 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில்  ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பது தெரிந்ததே. 
 
அந்த வகையில் இந்த வார எலிமினேஷன் சிக்கியவர்களில் மூன்று பேர்  வெளியேறும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. முதலாவது ஆக வினுஷா, இரண்டாவதாக விக்ரம் மூன்றாவது ஆக யுகேந்திரன் ஆகிய மூன்று போட்டியாளர்கள் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இவர்களில் மூவரில் ஒருவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து நாளை மறுநாள் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
குறிப்பாக இந்த மூவரில் குறைந்த வாக்குகள் பெற்றவர் வினுஷா என்றும் அதனால் அவர் தான் இந்த வாரம் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் நாளை  சனி, ஞாயிறு நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெறும் என்பதால் நாளை மாலையே வெளியேறும் போட்டியாளர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்