பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது.. அதிரடி தகவல்..!

புதன், 11 அக்டோபர் 2023 (16:33 IST)
கடந்த சில நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கடந்த வாரம் அனன்யா ராவ் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. ஆனால் அடுத்த நாளே பவா செல்லத்துரை தானாகவே இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து பிக் பாஸ் அனுமதியுடன் வெளியேறிவிட்டார்.

இந்த நிலையில் ஒரே வாரத்தில் திடீரென இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிவிட்டதால் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வாரம் பிக் ஹவுஸ் மற்றும் ஸ்மால் ஹவுஸ் ஆகிய இரண்டு ஹவுஸில் இருந்து விஷ்ணு, மாயா, பிரதீப், அக்சயா, ஜோவிகா, பூர்ணிமா மற்றும் விசித்ரா ஆகிய 7 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று கூறப்பட்டுள்ளதால்  போட்டியாளர்கள் நிம்மதி அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியதால் புதிய போட்டியாளர் வருவார் கூறப்பட்ட நிலையில் இப்போதைக்கு வைல்டு கார்டு போட்டியாளர் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்