வில்லன், கதாநாயகன்.. மீண்டும் வில்லன் கதாநாயகன் என நடிக்கும் அர்ஜூன் தாஸ்..!

Siva

வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (18:36 IST)
தனது அழுத்தமான குரல் மற்றும் தீவிரமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது கதாநாயகனாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
 
 
அர்ஜுன் தாஸ் இப்போது 'கும்கி 2' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம், விக்ரம் பிரபு நடித்த வெற்றி திரைப்படமான 'கும்கி' படத்தின் தொடர்ச்சி  என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து அதிகம் தகவல் வெளியாகாத நிலையில், இது ஒரு சவாலான கதைக்களத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வில்லனாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய அர்ஜுன் தாஸ், ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் நாயக நடித்து ‘குட் பேட் அக்லி’ படத்தில் மீண்டும் வில்லனாக நடித்து தற்போது மீண்டும் கதாநாயகனாக மாறியுள்ளார்.  
 
இந்த மாற்றம், அர்ஜுன் தாஸை ஒரு முக்கியமான நடிகராக தமிழ் சினிமாவில் நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள், அவரது புதிய படமான  'கும்கி 2' வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்