இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. ஜனவரி இறுதி இறுதி வாரத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படும் என்றும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ரசிகர்கள் கண்டு களிக்கும் வகையில் இதற்கென பிரத்தியேக ஓடிடி தளம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
டிஸ்னி ஹாட்ஸ்டார் இந்த பிரத்யேக ஓடிடி தளத்தை நேற்று சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதில் 24 மணி நேரமும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்றாலும் நேரடியாக ஒளிபரப்பாகுமா? அல்லது எடிட் செய்யப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.