முதல் பாகத்தில் ஓவியா-ஆரவ், இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா காதல் கிட்டத்தட்ட ஐம்பது நாட்களை கடந்த பின்னரே தோன்றியது. ஆனால் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்றைய முதல் நாளிலேயே 'நேர் கொண்ட பார்வை' அபிராமிக்கு காதல் வந்துவிட்டது. அவர் ரேஷ்மாவிடம் தான் கவின் மீது காதல் கொண்டிருப்பதாகவும், கவின் இந்த காதலை ஏற்று கொள்வாரா? என தெரியவில்லை என்றும் போகப்போக பார்ப்போம் என்றும் கூறுகின்றார். இது காதலாகுமா? அல்லது நட்புடன் நின்று கொள்ளுமா? என்பதை போகப்போக நாமும் பார்ப்போம்
நேற்றைய புரமோவில் சேரனும் ஃபாத்திமா பாபுவும் மோதும் வகையிலான ஒரு புரமோ பார்த்தோம். அதேபோல் சாண்டிக்கு அடிபட்டது போன்ற ஒரு வீடியோ புரமோவும் வெளிவந்தது. இரண்டுமே கிட்டத்தட்ட உண்மை என்பது நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து தெரிய வந்தது. தண்ணீர் பிரச்சனை குறித்து சேரன் கூறிய கருத்தை பாத்திமா பாபு ஏற்றுக்கொண்டாலும் அவரது முகம் சுருங்கியதை பார்க்க முடிந்தது