பிரதீப் என்னை மன்னித்துவிடுங்கள்: பிக்பாஸ் ஐஷு உருக்கமான பதிவு..!

ஞாயிறு, 19 நவம்பர் 2023 (08:15 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ஐஷு கடந்த வாரம் எலிமினேஷன் ஆன நிலையில் இன்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் பிரதீப் உள்பட ஒரு சிலரிடம் மன்னிப்பு கேட்டு உருக்கமான பதிவு செய்துள்ளார்.

பிரதீப் அவர்களுக்கு ரெக்கார்ட் கொடுத்தது தவறுதான் என்றும் அதை தற்போது உணர்ந்துள்ளேன் என்றும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தான் தகுதியானவர் இல்லை என்றும் அங்கு தான் கண்மூடித்தனமாக விளையாடி விட்டதாகவும் ஒரு சிலரை நம்பி ஏமாந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும் ஆனால் அந்த வாய்ப்பை தான் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் தன்னால் தனக்கு மட்டுமின்றி தனது குடும்பத்துக்கும் அவப்பெயர் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் நான் செய்த தவறுக்கு என்னை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள், ஆனால் தயவுசெய்து என் குடும்பத்தை விமர்சனம் செய்த செய்யாதீர்கள் என்றும் நான் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு போய் விட்டேன், ஆனால் என்னை நம்பி இருக்கும் குடும்பத்தை நான் ஏமாற்ற விரும்பாததால் மனதை மாற்றிக் கொண்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த நீண்ட பதிவை அடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்