பிரபல தொகைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் தன்னுடைய குணத்தாலும் மற்றும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது உற்சாகமாகவும், நடனமாடியும் சிரித்தபடி இருப்பது மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ஓவியா ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ஓவியா.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவிற்கு படங்களில் மற்றும் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்தது. இந்த நிலையில் மற்ற போட்டியாளர்களும் கேட்டும் கேள்வி என்னவென்றால், நாங்களும் பிக்பாஸ் வீட்டில் தானே இருந்தோம்?' என்று பொறாமையோடு கேட்கிறார்களாம்.
பிக்பாஸ் மூலம் அதிக புகழ் அடைந்தவர் என்றால் அது ஓவியாதான். டைட்டிலில் வெற்றி பெற்ற ஆரவ்வைக் கூட மறந்துவிட்டார்கள். ரசிகர்கள் ஓவியாவை தங்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கிறார்கள். இதனால் ஓவியாவுக்கு மார்க்கெட் கூடுகிறது. பட வாய்ப்புகளும் விளம்பர வாய்ப்புகளும் குவிகின்றன. ஆனால் மற்ற நட்சத்திரங்களுக்கு புகழ் இருந்தாலும், இந்த அளவுக்கு இல்லை என்பதே உண்மை. எனவே நடிகை பிந்து மாதவி உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களுக்கு ஓவியா மீது செம காண்டில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் வெளிகாட்டிக்கொள்ளாமல் ஓவியாவை அவர்களும் புகழ்ந்து வருகிறாராம்.