டெங்கு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பிக்பாஸ் சுஜா வருணி

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (13:03 IST)
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால், அதிகமாக சிறு குழந்தைகள் பரிதாபமாகப் பலியாகி வருகின்றனர்.

 
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான போட்டியாளர்களுள் சுஜா வருணியும் ஒருவர். இவர்  டெங்கு விழிப்புணர்வு வீடியோவில் நடித்துள்ளார்.
 
தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் தடுக்கும் விதமாக, அரசுடன் சேர்ந்து பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதார அமைச்சகம் டெங்குக்  காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஒளிபரப்பாகும் விளம்பரப் படத்தில் பிக்பாஸ் சுஜா வருணி  நடித்திருக்கிறார். இந்த விளம்பரம் தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
 



தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்