பரணி கேவலமானவர்: அடங்காத காயத்ரி ரகுராம்!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2017 (09:22 IST)
விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வாழங்குகிறார். இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் சர்ச்சைகளும், சுவாரஸ்யமும், விமர்சனமும் நிறைந்ததாக சென்று கொண்டிருக்கிறது.


 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காயத்ரி ரகுராம் நடிகை ஓவியாவை திட்ட சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து நடிகர் கமல் உள்ளிட்ட பிக் நிகழ்ச்சியில் உள்ள அனைத்து நடிகர், நடிகைகளையும் கைது செய்ய வேண்டும் என கூறினர். மேலும் நடிகை காயத்ரி ரகுராமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 
இதனையடுத்து காயத்ரி ரகுராமின் தாய் தனது மகளுக்காக கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் பிக் பாஸ் பங்கேற்பாளர்களை தொடர்பு கொண்ட நடிகர் கமல் காயத்ரி ரகுராமிடம் சற்று காட்டமாக கேள்விகளை கேட்டு அவர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதை மறைமுகமாக புரிய வைத்தார்.
 
இந்நிலையில் நடிகை ஓவியா கடந்த வாரம் மக்களின் அதிக வாக்குகளை பெற்று மீண்டும் வெளியேற்றத்தலிருந்து தப்பித்து போட்டியில் தொடர்கிறார். இதனையடுத்து நடிகை காயத்ரி மக்கள் எதை வைத்து வாக்களிக்கிறார்கள் என ஓவியா மீதான தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தினார்.
 
இதற்கு பதில் அளித்த ஓவியா, நாம் நாமாக இருந்தால் தான் மக்கள் ஓட்டளிப்பார்கள். ஆனால் அதனை ஏற்க மறுத்த காயத்ரி நிகழ்ச்சியில் இல்லாத பரணியை கேவலமானவர் என்கிற தொணியில் பரணியை விட கஞ்சா கருப்பு கேவலமானவரா என கேட்டார்.
 
கேவலமானவர் என்ற வார்த்தை கூற வேண்டாம் என ஓவியா அறிவுறுத்தியும் காயத்ரி ரகுராம் தொடர்ந்து பரணியை விட கஞ்சா கருப்பு கேவலமானவரா என ஒரே கேள்வியை கேட்டுக்கொண்டு இருந்தார். ஏற்கனவே சேரி பிஹேவியர் என கூறி சர்ச்சையில் சிக்கிய காயத்ரி ரகுராம் மீண்டும் நிகழ்ச்சியில் இல்லாத பரணியை வம்புக்கு இழுத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்