இந்த வீட்ல கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம்: பிக்பாஸ்5 லேட்டஸ்ட் ப்ரோமோ!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (19:21 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. வழக்கம் போலவே கமல் ஹாசனே தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு இந்த முறை வழக்கத்தை விட கொஞ்சம் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. 
 
ஆம், திருநங்கை, திருநங்கை மாடல் அழகி, விஜய் டிவி பிரபலங்கள் என போட்டியாளர்கள் அத்தனை பேரும் நிகழ்ச்சிக்கு பெரும் பங்களிப்பார்கள் என கூறலாம். வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை சற்றுமுன் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. 
 
அதில் கமல் ஹாசன் போட்டியாளர்கள் படுத்து உறங்கப்போகும் படுக்கையில் படுத்து புறம் பேசுவது இந்த வீட்டில் ரொம்ப கஷ்டம் என கூறி இந்த முறை புறம் பேசுவதை குற்றமாக வைத்துள்ளதை இந்த ப்ரோமோ மூலம் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ... 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்