பாசம் சும்மா பொங்கிடுச்சு.... நியாயத்திற்கு நீதி வாங்கி கொடு தலைவரே - அப்புறம் அரசியல் பேசலாம் !

சனி, 31 அக்டோபர் 2020 (14:54 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க வீட்டில் பல பல சம்பவங்கள் நடந்துள்ளது. அது அத்தனையும் புட்டு புட்டு வைத்துள்ள கமல் கோபப்படாமல் கூலாக பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே ப்ரோமோவை முடிச்சுட்டாரு. நேற்று ஆரி  நாம் கேட்க நினைத்த அத்தனையும் எல்லோரையும் கேட்டு பிடிச்சு மேய்ஞ்சுட்டாரு.

ஆகவே எப்படியும் இந்த வாரம் அவரை தான் வீட்டில் உள்ளவர்கள் நாமினேட் செய்வார்கள். வெளியில் இருக்குற ஆரி ஆர்மிஸ் நம்ம எல்லோரும் ஒன்று கூடி அவரை காப்பாற்றுவோம். இந்த ப்ரோமோவில் கமல், போனவாரம் தான் கேட்டாங்க தியேட்டர் துறந்துட்டாங்களான்னு? ஆனால், இது ஒன்னும் கொறச்சல் இல்ல படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களும் பக்கவா பொருந்தியிருக்கு.

கொஞ்சம் வீரம் இருக்கு , மலர்ந்தும் மலராத காதல் இருக்கு, அம்மா புள்ள செண்டிமெண்ட் நிறைய இருக்கு, பாசம் சும்மா பொங்கிடுச்சுங்க. கூடவே கொஞ்சம் அரசியலும் இருந்தது கவனிச்சிங்களா? அரசியக்க்கு தான் மேடை வேணும் நின்னு பேசணும் என்று அனிதா சம்பவத்தை நினைவு கூறுகிறார். தலைவரே எல்லா சரி தான் அர்ச்சனா ஆரிக்கு பண்ண டார்ச்சர்ல நீங்க வந்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குவீங்கன்னு பார்த்தா பாப்கார்ன்  சாப்பிட்டு கூலா பேசுறீங்க...  மொதல்ல நியாயத்திற்கு நீதி வாங்கி கொடு தலைவரே - அப்புறம் அரசியல் பேசலாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்